Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 1 August 2014

TRB-TNTET: பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.
இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

No comments: