Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 26 August 2014

TNPSC: ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு-I  2009 - 2011-இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப, நேர்காணல் பதவிகளுக்கு நான்கு கட்ட கலந்தாய்வுகளும் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 5 கட்ட கலந்தாய்வுகளும் நட்த்தப்பட்டன.
எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்காணல் பதவிகளுக்கு 5 ஆம் கட்ட கலந்தாய்வும் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 6ஆம் கட்ட கலந்தாய்வும் செப்., 01 மற்றும் செப்.., ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவெண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், எண்.3, பிரேசர் பாலச் சாலை, சென்னை – 600 003 (பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தெரிவிக்கப்பட்ட நாளில் வருகைதரத் தவறும் பட்சத்தில்
விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருங்கிணைந்த தரவரிசையையும் பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையையும் இழப்பதுடன், கலந்தாய்வில் பங்கேற்க மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செப்.,02 அன்று தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செப்.,01 அன்று நடைபெறும் கலந்தாய்வில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது போக மீதி எஞ்சியுள்ள பணியிடங்களூக்கு கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவதினால் மட்டுமே அவர்கள் பணி நியமன உரிமை கோர இயலாது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கூறியுள்ளார்.

No comments: