காமன் அட்மிஷன் டெஸ்ட் (CAT) தேர்வுக்கு ஆக.,6ம் தேதி முதல் செப்.,30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறந்த மேலாண்மை கல்லூரிகளிலும், ஐஐஎம்.,க்களிலும் முதுகலை பட்டம் பயில ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை ஐஐம்-இந்தூர் நடத்தி வருகின்றது. அந்த வகையில் 2014 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட் நுழைத்தேர்வின் முறையை இந்தாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு செய்யப்பட்டுள்ள மாற்றங்களை சரிவர கவனித்து விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையத்தை, விண்ணப்பிக்கும் போது கவனமாக தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
கேட் தேர்வு 99 நகரங்களில் 354 மைய்யங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment