தானிய சேமிப்பு கிடங்கு மண்டல மேலாளரால் அறிவிக்கப்பட்டுள்ள தானிய சேமிப்பு கிடங்கு உதவியாளர்(வேர்ஹவுசிங் அசிஸ்டெண்ட் கிரேடு-2) பணிக்காலியிடத்திற்கு பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேமிப்பு கிடங்கு உதவியாளர்-2 பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்ட தட்டச்சர் இளநிலை பயிற்சி(ஆங்கிலம்) பெற்றிருப்பது அவசியம் ஆகும். மேலும், இப்பதவிக்கான வயது வரம்பு 14.7.2014 அன்றைய நாளில் இந்து ஆதிதிராவிட அருந்ததியினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 25 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை எதுவும் கிடையாது.
உத்தேச பதிவு மூப்பு: இந்து ஆதிதிராவிடர் 30.6.2000 வரையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 30.6.2002 வரையும், இதர பிரிவினருக்கு 30.6.2005 வரையும் உத்தேச பதிவு மூப்பு இருக்க வேண்டும்.எனவே மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளை பதிவு செய்தவர்கள் மட்டும் சூலக்கரை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வித் தகுதிக்கான சான்றிதழ்,
குடும்ப அட்டை, சாதிசான்றிதழ் மற்றும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவையுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment