ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment