தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதியதாக எட்டு முதல்வர்கள் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் எட்டு முதல்வர்கள், பதவி உயர்வு மூலமாக மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பழைய பதவி அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது:
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டோமினிக் ஸ்தனிஸ்வாஸ் ஜூன் மாதத்தோடு ஓய்வு பெற்றதால் பெருந்துறை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றிய ஜெயராமன் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல்வர் தனசேகர் (மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி முதுநிலை விரிவுரையாளர்)
திருச்சி மாவட்டம் குமுளூர் முதல்வர் அருணாசலம் (அரியலூர் மாவட்டம் கீளப்பளூர் முதுநிலை விரிவுரையாளர்)
திருநெல்வேலி மாவட்டம் முனிஞ்சிப்பட்டி முதல்வர் செல்வின் (தூத்துக்குடி மாவட்டம் வாணராம்பட்டி முதுநிலை விரிவுரையாளர்)
திருப்பூர் மாவட்ட முதல்வர் திருஞானசம்பந்தன் (அதே நிறுனவத்தில் முதுநிலை விரிவுரையாளர்)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முதல்வர் ஜெயந்தி (அதே நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர்)
நாகப்பட்டினம் மாவட்டம் குருக்கத்தி முதல்வர் சுப்ரமணி (அதே நிறுனவத்தில் முதுநிலை விரிவுரையாளர்)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முதல்வர் மாரியப்பன் (அதே நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர்)
உள்ளிட்ட எட்டு பேர் பதவி உயர்வு பெற்று முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment