Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 15 July 2014

மாணவர் ஆன்லைன் குறைதீர்ப்பு திட்டம் விரைவில் அறிமுகம்: யுஜிசி

மாணவர்களுக்கான ஆன்-லைன் குறை தீர்ப்பு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர் குறைதீர்ப்பு தனிப் பிரிவுக்கான (செல்) பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், விதிகளுக்கு மாறாக நடைபெறும் செயல்களைத் தடுக்கும் வகையிலும் "ஆன்-லைன் மாணவர் குறைதீர்ப்பு திட்டத்தை' அறிமுகம் செய்ய யுஜிசி முடிவு செய்துள்ளது.

புகார் தெரிவிக்கும் மாணவர்கள், அந்தப் புகார் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அந்த இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர் குறைதீர்ப்பு தனிப் பிரிவுக்கு பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

அவ்வாறு நியமிக்கப்படும் பொறுப்பு அலுவலரின் பெயர், பதவி, முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை 10 நாள்களுக்குள் sgportalugc@gmail.com என்ற முகவரியில் பல்கலைக்கழகங்கள் பதிவு செய்யவேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

No comments: