Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 17 July 2014

காந்திகிராம பல்கலையின் தேசிய திறந்த நிலை பள்ளி கல்வி!

பள்ளிக்கு செல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்காக காந்திகிராம பல்கலையின் தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் கல்வி அளிக்கப்படுகிறது.
தேசிய திறந்தநிலை பள்ளியில் 8, 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சேர்க்கை நடக்கிறது. இதில் ஆண்டு முழுவதும் சேரலாம். எட்டாம் வகுப்புக்கு மாநில பாடத்திட்டம்; 10 ம் வகுப்பு, பிளஸ் 2 க்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும் உள்ளன.
எட்டாம் வகுப்பில் சேர, குறைந்தபட்சம் 14 வயது இருக்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் வகுப்புகள் நடக்கின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் 30 வாரங்களும், செய்முறை 5 வாரங்களும் நடக்கும். எட்டாம் வகுப்பு கட்டணம் 1,000 ரூபாய்; 10ம் வகுப்புக்கு பிற்பட்டோர் பிரிவில் ஆண்கள் 1,380 ரூபாய், பெண்கள் 1,130 ரூபாய்; எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 930 ரூபாய் செலுத்த வேண்டும்.
பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பட்டோர் பிரிவில் ஆண்கள் 1,530 ரூபாய், பெண்கள் 1,280 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 1,005 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து தேசிய திறந்தநிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுப்ராமன் கூறுகையில், "தமிழகத்தில் காந்திகிராம பல்கலையில் மட்டுமே தேசிய திறந்தநிலை பள்ளி உள்ளது. ஏப்ரல், டிசம்பரில் மட்டுமே தேர்வு நடக்கும். இங்கு தரப்படும் சான்றிதழ்களை மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு பயன்படுத்தலாம்" என்றார்.

No comments: