பெரியார் பல்கலையில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவியருக்காக, தனித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்லூரி வழியாக, மாணவர்கள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலையில், 2014 ஏப்ரல், மே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோல்வி அடைந்திருக்கும் மாணவர்களுக்காக, உயர்கல்வியை தொடரும் நோக்கில், துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 2011-12 ஆண்டில் சேர்க்கை பெற்ற இளநிலை மாணவர்களில், 1 முதல், 6ம் பருவம் வரை, ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தாலோ, அல்லது ஐந்தாம் பருவம் வரை, அரியர்ஸ் இல்லாமல், 6ம் பருவத்தில் இரு பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, அப்பாடங்களுக்கு, துணைத்தேர்வில் எழுதலாம்.
முதுநிலை தேர்வு முடிவுகளில், 2012-13ம் ஆண்டில் சேர்க்கை பெற்று, 1ம் பருவம் முதல், நான்காம் பருவம் வரை, ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தாலோ அல்லது, மூன்றாம் பருவம் வரை, அரியர்ஸ் இல்லாமல், நான்காம் பருவத்தில், இரு பாடங்களில் தோல்வியடைந்திருந்தால், அத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்துணைதேர்வுக்கான விண்ணப்பங்கள், கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாயும், ஒரு பாடத்தாளுக்கான கட்டணமாக இளநிலை பாடங்களுக்கு, 90 ரூபாயும், முதுநிலை பாடங்களுக்கு, 225 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக, 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்லூரி முதல்வர் வாயிலாக ஜூலை, 23ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். அதேபோல், கல்லூரியில் தேர்வெழுதும் மொத்த மாணவர்களின் தேர்வுக் கட்டணமும், ஜூலை, 15ம் தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட ஒரே டி.டி.,யாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment