அந்நிய மொழியான ஆங்கிலத்தை, ஒலி வழி மூலம் கற்றுக் கொள்வது எளிது என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வித்யாரம்பம் என்ற தொண்டு நிறு வனம் சில மாநகராட்சிப் பள்ளி களில் இந்த முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
உதாரணமாக ஆங்கிலத் தில் ’எஸ்’ (S) என்ற எழுத்தை வார்த்தைகளில் பயன்படுத்தும் போது, ‘ஸ்’ என்ற உச்சரிப்பே வரும். எனவே, S என்ற எழுத்துக்கு ‘ஸ்’ என்ற உச்சரிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதோடு பாம்பு ‘ஸ்ஸ்ஸ்’ என்று சத்தமிடுவ தால், பாம்பு போன்று கையை அசைப்பது சொல்லிக் கொடுக்கப் படுகிறது. இதே போன்று, ஒவ் வொரு எழுத்துக்கும் ஒரு உச்சரிப் பும், ஒரு செயலும் சொல்லித் தரப்படுகிறது.
இதுபற்றி வித்யாரம்பத்தைச் சேர்ந்த சுசீலா ஆனந்த் கூறும் போது, “மாணவர்கள் எழுத்து களின் வடிவத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆங்கிலத்தை வாசிக்கத் தொடங்கும்போது அது ஒலி வழி மூலம் இருக்க வேண்டும். ஆங் கிலத்தை தாய்மொழியாக கொண்ட அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில், ஆங்கிலத்தை வாசிக்க, இந்த முறையைத்தான் பயன் படுத்துகின்றனர்,” என்றார்.
ஒலி வழி முறை மாணவர் களுடன் இரு வழி தகவல் பரி மாற்றத்துக்கு வழி வகுக்கிறது என்று சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் வகுப்புகளை எடுக்கும் ஷண்முகப்பிரியா கூறு கிறார். வகுப்புகள் ஆரம்பித்து 25 நாட்களிலேயே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பெரிய வார்த்தைகள் வேகமாக வாசிக்க தொடங்கிவிட்டனர் என்று மற்றொரு ஆசிரியரான பாரதி கூறுகிறார். இதன் மூலம் அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களையும் மாணவர் களால் எளிதில் படிக்க முடிகிறது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சைதாப்பேட்டை தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜீவரத்தினம் கூறும்போது, “இந்த முறை எளிதாக இருப்பதால், நான்காம் வகுப்பு முதலே இதை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.
No comments:
Post a Comment