Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 12 July 2014

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவு மூப்பை மீண்டும் பெற அவர்களுக்கு நடப்பாண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதம் முடிவில் துறை அமைச்சர் மோகன் புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றின் விவரம்
கடந்த 2011 முதல் 2013 வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பை மீண்டும் பெறவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றிடவும் நடப்பாண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் ஒரு லட்சம் பதிவுதாரர்கள் பயன் பெறுவர்.
தமிழகத்தில் 12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள வெல்டர், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், ஏ.சி. மெக்கானிக் போன்ற தொழில் பிரிவுகள் 10.86 கோடி ரூபாயில் கூடுதலாக துவக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்கென புதிதாக பொருத்துனர் தொழிற்பிரிவு 160 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.
தொழிற்பள்ளிகளில் நடத்தப்படும் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில் மாணவர் சேர்க்கைக்கான வயது உச்ச வரம்பு 40 முதல் 50 ஆக உயர்த்தப்படும். நடப்பாண்டு முதல் பொது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மகளிருக்கு வயது உச்ச வரம்பு நீக்கப்படும்.

No comments: