அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு 2வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21-ல் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என கூட்டமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தெரிவித்தது: சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் 2வது மாநில மாநாட்டில் 7 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதிஉதவியை (Block Grant) உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகஅரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் அனைவரும் 60 வயது வரை பணியாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் வருகிற ஜூலை 21-ம் தேதி கூட்டமைப்பு சார்பில் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுளளது என எஸ்.மதியழகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment