Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 16 June 2014

TNAU: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்

COUNSELING SCHEDULE

RANK List: Son/Daughter of Ex-Servicemen

RANK List: Differently Abled Person

Eminent Sports Person: Rank List to be hosted on 18.06.2014

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது கல்வி பிரிவில் ஆர்.சூர்யமல்லிகராஜ், டி.இலக்கியபிரியா ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இளம் அறிவியல் பிரிவில் 13 பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் உறுப்புக் கல்லூரிகளில் 1040 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் 780 இடங்கள் என மொத்தம் 1820 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு இளம் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்ப விநியோகம் மே 12-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நடந்தது.
இதனிடையே ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பும் பணி ஜூன் 7-ஆம் தேதி முடிவடைந்தது. இதன்படி சுமார் 42,784 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5,284 விண்ணப்பங்கள் அதிகமாகும் என மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதில் பொது கல்வியில், தொழில்முறை படிப்பு, முன்னாள் ராணுவ வீரர்களின் மகன் மற்றும் மகள், சிறப்பு பிரிவினர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சந்ததியினர், வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் நிறுவன உபயதாரர்களுக்கென தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது கல்வி பிரிவு தரவரிசைப் பட்டியலில் 25,534 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆர்.சூர்யமல்லிகராஜ், டி.இலக்கியபிரியா ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து 199.50 கட்-ஆப் மதிப்பெண்களை 5 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தொழில்முறை படிப்பு பிரிவு தரவரிசைப் பட்டியலில் 1,673 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் எஸ்.கௌரீஸ்வரி 199.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து எம்.தமிழரசன் 197.75 கட்-ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், என்.கலைச்செல்வி 197.00 கட்-ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தொழில்முறை படிப்பில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பி.டெக். வேளாண் பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேரலாம். சிறப்பு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலில் 40 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன், மகள் பிரிவில் 260 பேரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சந்ததியினர் பிரிவில் 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் நிறுவன உபயதாரர்கள் பிரிவில் 91 பேர் இடம் பெற்றுள்ள்ளனர்.
பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு, தொழில் கல்விக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

No comments: