Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 18 June 2014

BRICS பல்கலை தரவரிசையில் ஐஐடி தில்லிக்கு 13வது இடம்

BRICS பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஐஐடி-தில்லி 13வது இடத்தை தக்க வைத்துள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வேயின்படி இந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில் BRICS பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில், ஐஐடி-தில்லி 13வது இடத்தையும், ஐஐடி-மும்பை 15வது இடத்தையும், ஐஐடி-கான்பூர் 16வது இடத்தையும், ஐஐடி-கராக்பூர் 20வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதை, ஜூன் 17ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த தரவரிசை பட்டியலின் முதல் பிரதியை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்தார். இந்தியாவில் 15 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியல் 100ல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஐஐடி.,க்கள் சிறந்த இடத்தை பிடித்துள்ளது என்றும் மேன்மேலும் வளர்ச்சியடை ஐஐடி.க்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் தெரிவித்துள்ளார்.

No comments: