
இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது. முன்னரே அறிவித்தபடி வெள்ளிக்கிழமை (நாளை) தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிடுகிறார்.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் விவரங்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
மேற்கண்ட இணையதள முகவரிகளில் www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செல்போனில் பார்க்கலாம்
தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவை அறியலாம்.
தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியான பின்னரே இந்த வசதி செயல்படத் தொடங்கும். எனவே, அதற்கு முன்பாக தேர்வு முடிவை அறிய மாணவர்கள் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment