
தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், எஸ் எம்எஸ் மூலமாக முடிவுகளை மாண வர்கள் தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள @cbse10 என்றும் சிபிஎஸ்இ பிளஸ்2 வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள @cbse12 என்றும் டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இணையதள வசதி இல்லாதவர்கள்கூட இந்த சேவை மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். txtWeb நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது என்று செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment