
இதுதவிர, ஐந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளும், முதுநிலை டிப்ளமோ படிப்புகளும், முதுநிலை மற்றும் பிஎச்.டி. இணைந்த ஒருங்கிணைந்த படிப்புகளும் உள்ளன. பல்வேறு பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளும், அட்வான்ஸ்ட் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. அத்துடன், பிஎச்.டி படிப்புகளும் உள்ளன.
இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.250. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.125. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15.05.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 30.05.2014, 31.05.2014 மற்றும் 01.06.2014.
விவரங்களுக்கு: www.pondiuni.edu.in
No comments:
Post a Comment