‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டது. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் , கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். இடங்களையும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் “டான்செட்” எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட 12 இடங்களில் மார்ச் 22, 23-ம் தேதிகளில் நடந்தது. எம்பிஏ நுழைவுத்தேர்வை 27,750 பேரும், எம்சிஏ நுழைவுத்தேர்வை 11,862 பேரும், எம்இ., எம்டெக். தேர்வினை 37,906 பேரும் எழுதினர்.
No comments:
Post a Comment