Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 9 May 2014

சட்டப் படிப்புகளுக்கு மே 12 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.வணங்காமுடி கூறினார்.
முதுநிலை டிப்ளமோ படிப்பில் சட்ட நூலகர் படிப்பு, நுகர்வோர் சட்டம் மற்றும் பாதுகாப்பு, சைபர் ஃபாரன்சிக் மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி, கிரிமினல் சட்டம், கிரிமினாலஜி மற்றும் ஃபாரன்சிக் சயின்ஸ், மருத்துவ சட்டம் தொடர்பான படிப்புகள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்) (120 இடங்கள்), பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) (60 இடங்கள்) உள்ளிட்ட படிப்புகளுக்கு மே 12-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6 ஆகும். ஜூன் 13-ஆம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளில் 1,052 பி.ஏ.,பி.எல். இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். ஜூன் 13-ஆம் தேதிக்குள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் 1,262 3 ஆண்டு பி.எல். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல்
விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் பூர்த்திசெய் யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.

சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள 3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்புக்கும் மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்தப் படிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 11 ஆகும். இந்தப் படிப்புக்கான ரேங்க் லிஸ்ட் ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்படும்.

அதேபோல், பல்கலைக்கழகத்தில் வர்த்தக சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் எம்.எல். படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங் களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி ஆகஸ்ட் 8 ஆகும். ரேங்க் லிஸ்ட் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.

அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட 11 வகையான முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் மே 26 முதல் விநியோகிக்கப்படும், என்றார் அவர்.

அரசுச் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளுக்கு அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திலும், சீர்மிகு சட்டப் பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகளுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

No comments: