சென்னை பல்கலைக்கழக முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
சென்னை பல்கலைக்கழகத்தின் 68 துறைகளில் வழங்கப்படும் பட்ட மேற்படிப்பு, ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.), சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பத்தை பல்கலைக்கழக விற்பனை மையத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.unom.ac.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.300. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான சேர்க்கை முதன் முறையாக கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி.) நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., ரெகுலர் பிரிவில் 45 இடங்களும், எம்.பி.ஏ. சுயநிதிப் பிரிவில் 50 இடங்களும், எம்.சி.ஏ. படிப்பில் 30 இடங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment