சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத ஊழியர்கள் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்கள் விபரங்களை அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நிதிநெருக்கடி, நிதிமுறைகேடுகளினால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட தமிழகஅரசு முதன்மைச் செயலாளரான ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நிதிநெருக்கடியை சீரமைத்து வருகிறார்.
இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்கள் தங்களது மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள், சேமநலதி, பங்களிப்பு சேமநலநிதி மற்றும் ஆயுள் காப்பீடு பங்குகளில் முதலீடு, வங்கி நிதி நிறுவனங்களில் கணக்கில் உள்ள சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆகிய விபரங்களை சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து நிர்வாக அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும், படிவங்களில் அளிக்கப்படும் தகவல்கள் தவறாக இருப்பின், தவறாக தகவல் அளித்தமைக்கு தங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment