Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 10 April 2014

சென்னை பல்கலை. இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.

 இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
பல்கலைக்கழகம் கடந்த 2010-11 கல்வியாண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்), ஆதரவற்ற மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளியின் குழந்தைகள், முதல் தலைமுறை மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச பட்டப் படிப்பை பெற முடியும்.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழகத்தின்  இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments: