வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தனித்தேர்வர்கள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tndge.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகலினையும் இணைத்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். தேர்வுக் கட்டணத்தையும் அங்கே செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்துக்கு) ரூ.50 செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 10 முதல் 17 வரை (ஏப்ரல் 13, 14 தவிர) நேரில் சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment