Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 29 April 2014

வேளாண் இளநிலைப் படிப்புகளுக்கு மே 12-ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்

வேளாண் இளநிலைப் படிப்புகளுக்கு மே 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2014-15 கல்வியாண்டில் 13 வகையான வேளாண் இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த விவரங்களை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி இன்று வெளியிட்டார்.
அப்போது, மே 12ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர் தரவரிசைப் பட்டியல் ஜூன் 16ஆம் வெளியிடப்பட்டு, சேர்க்கை கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சேர்க்கைக்குப் பின் ஜூலை 25ஆம் தேதி கல்லூரிகள் தொடங்கும் என்றும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

No comments: