மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தனி இணையதளத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கே.மணிவாசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:
தமிழகத்தில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசின் உதவித் தொகையை ஏதாவது ஒரு வகையில் பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் என்ற முறையில் தனிப்பட்ட மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து உள்ளேன். அப்போது என்னிடம் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தனியாக துறை ஏதும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் தனித் துறை செயல்படுகிறது. அதேபோல் வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டையும் சரிவர கடைப்பிடித்து வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் ஒரு மைல் கல்லாகும் என்றார் கே.மணிவாசன்.
நிகழ்ச்சியில் ஐக்கிய நாட்டு சங்கங்களின் இந்திய கூட்டமைப்பின் செயலாளர் அமேரிக்கை வி.நாராயணன் பேசுகையில், முதமுறையாக மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தனியாக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களை பெறலாம்.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் (ஜ்ஜ்ஜ்.த்ர்க்ஷள்4க்ண்ச்ச்ங்ழ்ங்ய்ற்ப்ஹ்ஹக்ஷப்ங்க்.ண்ய்) இந்த இணையதளம் வடிவமைக்கப்படும். காது கேளாதோர்களுக்கான சிறப்புப் பள்ளியை ஆட்சியில் இருக்கும்போது எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார்.
அவரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி இணையதளத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும் என்றார் அவர்.
மாற்றுத் திறனாளிகளின் நண்பர் குழாம் மற்றும் ஐக்கிய நாட்டு சங்கங்களின் இந்திய கூட்டமைப்பு இணைந்து, மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனி இணையதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாநில பொதுச் செயலாளர் ஆவின் கி.கோபிநாத், மாற்றுத்திறனாளிகளின் நண்பர் குழாமின் அமைப்பாளர் ஸ்ரீராம், எம்.ஜி.ஆர். காது கேளாதோர் சிறப்பு பள்ளியின் முதல்வர் லதா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment