இந்திய அளவிலான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த பிரம்மாண்டமான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வரும் மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, தனியார் துறை தொடங்கி, அரசு வேலைவாய்ப்பு வரை பல தகவல்களை உடனுக்குடன் அளித்து வரும் கற்க கசடற நிகழ்ச்சி கல்வி கடலின் கலங்கரை விளக்கம் என்ற இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளது.
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் குறித்த விளக்கம்; கல்வி கண்காட்சியுடன் தினமும் காலை மாலை 2 மணி நேரம் கருத்தரங்கம்; மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு அனைத்து துறை வல்லுனர்களின் விளக்கங்கள்; கற்க கசடற நிகழ்ச்சி அரங்கில் உள்ள வல்லுநர்களிடம் நேரலை உரையாடல் உள்ளிட்ட வாய்ப்புகள் கண்காட்சி அரங்கில் இடம்பெற உள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்:
மார்ச் 28-30
திருச்சி, தாஜ் திருமண மண்டபம்
ஏப்ரல் 4-6
சேலம், பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம்
திண்டுக்கல், நாயுடு மஹாஜன மஹால்
ஏப்ரல் 11-13
புனித அந்தோனி மஹால்
புதுச்சேரி
ஏப்ரல் 18-20
தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நினைவு அரங்கம்
ஏப்ரல் 25-27
செங்கல்பட்டு , கிருஷ்ணா மஹால்
மே 2-4
திருநெல்வேலி, நூற்றாண்டு மண்டபம்
No comments:
Post a Comment