# பைப்பில் கழுவுவதற்குப் பதிலாக, காய்கறிகளைப் பாத்திரத்தில் இட்டுக் கழுவலாம்.
# வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்துவிட்டுக்கொண்டே பல் துலக்க, முகம் கழுவுவதற்குப் பதிலாக, தேவையான தண்ணீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம்.
# ஷவரில் குளிப்பதைவிட பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கலாம்.
# பாத்ரூம்களில் நாமே இயக்கும் ஃபிளஷ், குழாய்களைச் சரியாக அடைக்க வேண்டும்.
# வெஸ்டர்ன் டாய்லெட் ஃபிளஷில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
# வாஷிங்மெஷினை எப்போதும் ஃபுல் மோடில் பயன்படுத்தவும்.
# எல்லா பைப்களிலும் தண்ணீர் வெளியேறும் அளவை கட்டுப்படுத்தி வைக்கலாம்.
# ஒழுகும் குழாய்கள், டாய்லெட் கசிவுகளை உடனடியாகப் பழுது பார்க்கலாம்.
# தேவையற்ற நேரத்தில் குழாய்களை அடைத்து வைக்கலாம்.
# தரையைத் துடைத்த தண்ணீர், பாத்திரம் கழுவிய தண்ணீர், துணி துவைத்த தண்ணீர் ஆகியவற்றை டாய்லெட் ஃபிளெஷ்ஷுக்கும், தாவரம் வளர்க்கவும் பயன்படுத்தலாம்.
# வெயிலற்ற காலை, மாலை வேளைகளில் மட்டுமே தாவரங்கள், புல்வெளிகளுக்குத் தண்ணீர் விடுங்கள்.
# அதிகத் தண்ணீர் தேவைப்படாத ஆல், அரசு, அசோகம், வேம்பு, செண்பகம், இயல்வாகை, புங்கை, சரக்கொன்றை போன்ற உள்நாட்டு தாவரங்களை வளருங்கள்.
No comments:
Post a Comment