ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்., 7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அளவை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்து கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த டி.இ.டி. தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார். அதன்படி டி.இ.டி. முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு கடந்த 12ம் தேதி முதல் ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி 31ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற 27 ஆயிரம் பேருக்கு ஏப். 7 முதல் 25ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல் ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என டி.ஆர்.பி. வட்டாரம் தெரிவித்துள்ளது.
School Morning Prayer Activities - 18.11.2024
6 hours ago
No comments:
Post a Comment