ப்ளஸ்2 விடைத்தாள்கள் திருத்தும்பணி மார்ச்21-ம் தேதி நாளை துவங்குகிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் ப்ளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 3-ம் தேதி துவங்கிய தேர்வு, மார்ச்25-ம்தேதி கணினி அறிவியல் பாடத் தேர்வுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ் முதல், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் தேர்வுகளுக்கான மாணவர்களின் விடைத்தாள்கள், அந்தந்த மாவட்டத்திலுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்தந்த தேர்வுகள் முடிந்த நாளிலேயே குறிப்பிட்ட மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் ஏதும் நடந்து விடாத வகையில் பள்ளிக்கல்வி தேர்வுகள் துறையினர் விழிப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில், எந்தந்த மாவட்டத்துக்கு, எந்த மாவட்டத்து மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் 2 தேர்வின் முக்கிய பாடமான உயிரியல் பாடத்துக்கான தேர்வு மார்ச்20-ம் தேதி இன்று நடக்கிறது. மார்ச்25-ம் தேதி வரை தேர்வுகள் இருந்தாலும் கூட, உயிரியல் தேர்வு முடிவடைந்தவுடன், விடைத்தாளக்ள் திருத்தும் பணியை துவங்க பள்ளிக் கல்வித் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மார்ச்21-ம் தேதி நாளை காலை முதல் ப்ளஸ்2 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. முதல்கட்டமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கான மாணவர்களின் விடைத்தாளக்ள் திருத்தப்படுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கவுள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கல்வி மாவட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 60 முதல் சுமார் 200 ஆசிரியர்கள் வரை திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். விரைவாக இப்பணியை முடித்து தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மதுரை மாவட்டத்தில், எனது மேற்பார்வையில்(சிஇஓ) செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்ட கல்வி மாவட்ட டிஇஓ மேற்பார்வையில், டிஇசிஎல்எல் பள்ளியிலும், மேலூர் கல்வி மாவட்ட டிஇஓ மேற்பார்வையில், சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மதுரை செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 180 ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 கல்வி மாவட்டத்திலும் சுமார் 300 ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்வுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment