பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் 57 ஆயிரத்து 157 மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.
வேலூர் கல்வி மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் 28 ஆயிரத்து 476 மாணவ, மாணவியரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 95 தேர்வு மையங்களில் 28 ஆயிரத்து 681 மாணவ, மாணியரும் தேர்வு எழுதவுள்ளனர்.
26-ம் தேதி தொடங்கும் பொதுத் தேர்வு இவ்வாண்டு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள் 30 பக்கங்களைக் கொண்டவையாக அமைகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களில் இடம்பெற்ற பார்கோடு முறை, புகைப்படம், தேர்வு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் இந்த விடைத் தாள்களிலும் பின்பற்றப்படுகின்றன.
No comments:
Post a Comment