மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய தகுதித் திறனாய்வுத் தேர்வின் நேரம் திடீரென மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் காலை 9. 30 மணிக்கு தேர்வு தொடங்காததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தகுதி திறனாயவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் 560 மையங்களில் இந்த தேர்வை எழுது இருந்தனர்.
காலை 9.30 மணி அளவில் தொடங்க வேண்டிய தேர்வானது திடீரென பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்பட்டது.
திடீரென வெளியான இந்த அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக வெளியூர்களில் இருந்த வந்த மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர். தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்களை கொண்டு வந்த வாகனம் உதகை அருகே விபத்துக்குள்ளானதினால் நேரம் மாற்றப்பட்டதாக தேர்வுத்துறை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment