இந்தியாவிலுள்ள 300க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்லூரிகளில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம் மற்றும் வணிக மேலாண்மை தொடர்பான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆண்டுதோறும் MAT எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.
வரும் கல்வியாண்டிற்கான (MAT - 2014) தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத்தேர்வு பிப்.,2ம் தேதி நடைபெறுகிறது. கணினி வழி எழுத்துதேர்வு பிப்.,8ம் தேதி நடைபெறுகிறது.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க வண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200 கட்டணத்தை All India Management Association, Delhi என்ற முகவரிக்கு டிடியாக எடுத்து அனுப்பவும்.
ஜனவரி 18 முதல் 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.apps.aima.in/matfeb14 என்ற இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment