சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் 600 பேருக்கு வளாக நேர்முக தேர்வில் இந்த ஆண்டு சுமார் 181 நிறுவனங்களிடம் இருந்து 716 பணி வாய்ப்புகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்திய தொழில்நுட்ப கழகத்தின் துணைப்பதிவாளர் லெப்டினன் கேனல் ஜெயக்குமார், கூறும் போது
சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் இரட்டை பட்டம் பயிலும் 69 சதவீத மாணவர்களும் பி.டெக் பயிலும் மாணவர்களில் 59.1சதவீதத்தினரும், எம்.டெக் பயிலும் மாணவர்களில் 39.4 சதவீதத்தினரும், எம்.ஏ. மாணவர்கள் 18.5 சதவீதத்தினருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது கடந்த ஆண்டு 169 நிறுவனங்களிடம் இருந்து 551 மாணவர்கள் 617 வேலை வாயுப்புகளை பெற்றனர். இந்த ஆண்டு இது அதிகரித்துள்ளது. இது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மந்தநிலை இல்லாததை காட்டுகிறது.
மேலும் பல நிறுவங்கள் இந்த ஆண்டு வளாக நேர்முகத்தேர்விற்கு வந்து கூடுதல் வேலை வாய்ப்புகள் வழங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment