Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 24 December 2013

வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?

ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ கல்வி முறை அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வு ரத்தாகும் வாய்ப்பு இருப்பதால், பல்வேறு தரப்பினரும் பத்தாம் வகுப்பில் இக்கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
     வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்படுவதற்கு, தேவையான புதிய பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடந்து வந்தது. 
    தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு, பாடத்திட்ட தயாரிப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்புக்கும் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால், உடனடியாக புத்தகங்கள் அச்சிடும் வகையில் பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு ரத்தாகும் என்பதால் இந்த கல்வி முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது உள்ள கல்வி திட்டமோ அல்லது புதிய திட்டமோ அனைத்துக்கும் தயார் நிலையில் கல்வித்துறை உள்ளது’’ என்றனர்.

No comments: