சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளிகளுக்கு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் நடந்த பள்ளி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஜனவரி 7ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமரா பொருத்திவிட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்து சான்று பெற வேண்டும். பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்கு மாணவர் பாதுகாப்பு பிரிவை உருவாக்க வேண்டும். மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் மாணவர்களை அழைத்து வரும் தனியார் வாகன ஓட்டுகளின் விபரங்களை சேகரிக்கவும் பள்ளி நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment