சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொறியியல் கல்வியில் சேருவதற்கான கலந்தாய்வு கிண்டி வளாகத்தில் இன்று தொடங்கியுள்ளது.
கிண்டி, குரோம்பேட்டை எம்.ஐ.டி, ஏ.சி.டி வளாகங்களிலுள்ள 840 இடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்த 1000 பேரில் தகுதியான 705 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதனால், கலந்துகொள்ளும் அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் போன்ற துறைகளில் பகுதி நேரமாக கல்வி பயில இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில், பட்டய படிப்பு படிப்பு முடித்தவர்களே சேருகின்றனர் என்பதால், அவர்களுடைய பணி அனுபவம் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பொறியியல் கல்வியில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று நாளையும் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment