ஜி.பி.ஏ.டி. எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்(2014), ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பால் வரும் பிப்ரவரி 25 - 27ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.
அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வானது, நாட்டின் பார்மசி கல்லூரிகளில் எம்.பார்ம்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.
இத்தேர்வு குறித்த கேள்விகளும், அதற்கு நிபுணர்களின் பதில்களும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. படித்துப் பார்த்து மாணவர்கள் பயன் பெறவும்.
GPAT தேர்வுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அதை எழுதுபவர் எவ்வாறு தயாராவது?
பல மாணவர்கள், இத்தேர்வு மே மாதம்தான் நடத்தப்படும் என்று நினைக்கின்றனர். அது தவறு. இத்தேர்வுக்கு தயாராகும் நபர்கள், பார்மசூடிக்ஸ், பார்மகாலஜி, பார்மகாக்னசி, பார்ம் அனலிசிஸ் மற்றும் பார்மசூடிகல் கெமிஸ்ட்ரி என்ற 5 முக்கிய பேப்பர்களில், ஆர்கானிக் கெமிஸ்ட்ரிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், ஜுரிஸ்புரூடன்ஸ், மைக்ரோபயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகளிலிருந்தும் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில், GPAT தேர்வில் இருந்த கடினமான விஷயங்கள் என்ன? இந்த 2014ம் ஆண்டில் அத்தேர்வை எழுதுவோர் என்ன எதிர்பார்க்க முடியும்?
GPAT பாடத்திட்டத்தின்படி, அத்தேர்வுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, மெயின் பேப்பர்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. இந்தமுறை ஒரேயொரு புதிய அம்சம் உள்ளது. அது என்னவெனில், ஆர்கானிக் மற்றும் பிசிகல் கெமிஸ்ட்ரி பிரிவுகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இது எதற்காக இங்கு கூறப்படுகிறதென்றால், இந்த 2 பாடங்களையும் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவ்வளவு அக்கறையுடன் படிப்பதில்லை என்பதால்தான். தங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பில் அவற்றைப் படித்ததுபோல் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
எனவே, ஐந்து மெயின் பேப்பர்களுடன் சேர்த்து, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மற்றும் பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கும் GPAT பாடத்திட்டத்தின் படி, கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது அவசியம்.
GPAT ஆன்லைன் முறையிலான தேர்வுக்கும், ஆப்லைன் முறையிலான தேர்வுக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன?
பொதுவாக, பேனா மற்றும் பென்சில் முறையில் எழுதப்படும் ஆப்லைன் GPAT தேர்விலேயே எழுதுபவர்களுக்கு பரிச்சயம் அதிகம். அதேசமயம், ஆன்லைன் முறையிலான தேர்வு முற்றிலும் மாறுபட்டதல்ல. இரண்டு தேர்வுகளுக்கும் தயாராகும் முறைகளில் மாறுதல்கள் கிடையாது.
GPAT ஆப்லைன் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் நீளமாக இருக்கும். ஆனால், ஆன்லைன் முறையிலான தேர்வில் அந்த சிக்கல் இல்லை. இதனால் மாணவர்கள் நன்மையடைவர். ஆன்லைன் தேர்வுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள, மாதிரி ஆன்லைன் தேர்வுகளை(online mock tests) எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எந்த முக்கிய பார்மசி தேர்வுகளை எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கலாம்?
GPAT தேர்வில் பெற்ற ரேங்க் அடிப்படையில், BHU, UICT - Mumbai, DIPSAR, Punjab university போன்ற கல்வி நிறுவனங்களில், கவுன்சிலிங் மூலமாக, எம்.பார்ம் படிப்புகளில் பல்வேறு பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கை பெறுவார்கள்.
இதர பிரபல பல்கலைகளில் இடம்பெற, மாணவர்கள் தனி நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும். NIPER, Sagar University, Jamia Hamdard, Manipal, Narsee Monjee and BITS Pilani போன்றவை அந்த கல்வி நிறுவனங்களில் சில.
GPAT தேர்வெழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள் என்ன?
கடுமையாக உழைக்க வேண்டும் மற்றும் பாடத்திட்டத்தை சரியான காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும், உங்களின் கருத்தாக்கத்தையும் கட்டமைக்க வேண்டும்.
மெயின் பேப்பர்களில் அதிக கவனம் செலுத்தி, திருப்புதல் மேற்கொள்ள தேவையான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியை படித்து முடித்த பின்னர், அதற்கான கேள்விகளுக்கு பதிலளித்து பயிற்சியளிக்கவும். வெற்றிக்கு குறுக்கு வழி என்று எதுவுமில்லை.
No comments:
Post a Comment