Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 5 December 2013

தாட்கோ ஆதிதிராவிடர் நலத் திட்டங்கள் : ஆன்லைனில் விண்ணப்பம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர்களுக்கான கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 06.12.2013 முதல் 22.12.2013 வரை வரவேற்கப்படுகின்றன. 
நிலம் வாங்கும் திட்டம்  - பெண்களுக்கானது
நிலம் மேம்பாடு திட்டம் - இருபாலருக்கும்
தொழில் முனைவோர் மேம்பாட்டுத்  திட்டம்
பெட்ரோல் / டீசல் / கேஸ் சில்லரை விற்பனை நிலையம்
இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்
மருத்துவமனை, மருந்துக்கடை, கண்கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி
விருப்புரிமை நிதி திட்டம்
இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி
தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி
பட்டயக் கணக்கர் / செலவு கணக்கர்கள் சொந்தமாக  தொழில்  துவங்க நிதியுதவி
மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதி திராவிடர்களாக இருக்க வேண்டும்.  கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.    குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 இலட்சம் ஆகும்.  சிறப்புத் திட்டமான பெட்ரோல்/டீசல் / கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சம் வரை இருக்கலாம். வரிசை எண். 10 முதல் 12 வரையிலான இனங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை. வரிசை எண். 12க்கான இனத்திற்கான வயது வரம்பு 25-45 ஆகும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் என்ற இணையதள முகவரிக்கு சென்று  விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.  பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி  ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்யவேண்டும்.  அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிடவேண்டும்.  புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 
மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தில்  ரூ.20/- செலுத்தி  அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

No comments: