Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 16 December 2013

குறைந்த செலவில் வெளிநாட்டில் படிக்க...

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு இரண்டாமிடம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் என்னென்ன கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது பயனளிக்கும்.
பிரிட்டன் (BRITISH CHEVENING SCHOLARSHIPS): பிரிட்டனில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இது. இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களுக்கு www.chevening.org
பிரிட்டன் (COMMONWEALTH SCHOLARSHIPS) : பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான திட்டம் இது. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா உள்பட 53 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறத் தகுதியானவர்கள். டியூஷன் கட்டணம், தினசரிச் செலவு, விமானப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கியக் கட்டணங்கள் இந்த உதவித்தொகைக்குள் அடங்கும். மேலும் விவரங்களுக்கு: www.cscuk.dfid.gov.uk
அமெரிக்கா (USA FULBRIGHT SCHOLARSHIPS): மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக அமெரிக்க அரசு வழங்கும் உதவித்தொகை இது. படிக்கும் காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் செலவுகளை உள்ளடக்கியது இந்த உதவித்தொகை. விவரங்களுக்கு: www.iie.org/en/Fulbright
அமெரிக்கா (ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS) : தனியார் பங்களிப்பு மூலம் இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்று.
ஆஸ்திரேலியா (AUSTRALIA AWARDS SCHOLARSHIPS): திறமையும் தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இது. அதிக மதிப்பெண்களுடன் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறத் தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு: www.australiaawards.gov.au

No comments: