திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை சார்பில் படித்த பெண்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுய தொழில் முனைவோராக படித்த பெண்களை உருவாக்கும் நோக்கில், DTP, Tally, செல்போன் பழுதுபார்த்தல் உள்ளிட்ட 4 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மரபுசாரா துறைகள் மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசின் சுயதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 25 பெண்கள் வீதம் மொத்தம் 100 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
25 நாட்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், தொழில் தொடங்குவதற்கான அனைத்துத் தகவல்களும், மார்க்கெட்டிங் சர்வே, வங்கிக் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியில் பங்கேற்றதன் மூலமாக சார்புத்தன்மையின்றி சுயமாக தொழில் செய்து வருவாயைப் பெருக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இதில் பயிற்சி பெறுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment