Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 13 November 2013

TET/TNPSC: தமிழ் இலக்கியம்

சைவமும் தமிழும்
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
* 1,2,3ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவராம்.
* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.
* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.
* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.
* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்
* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.
* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.
* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.
* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 துருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.
* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.
* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.
* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.
* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்
* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.
* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.
* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.
* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.
* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.
* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.
* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.
* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.
திருநாவுக்கரசர்
* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.
* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.
* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.
* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.
* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்
* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.
* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.
* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.
சுந்தரர்
* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.
* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.
* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.
* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.
* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.
மாணிக்கவாசகர்
* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.
* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.
* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.
* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.
* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.
* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்
* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.
* வானாகி மண்ணாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.
* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.
இராமலிங்க அடிகள்
* பிறந்த ஊர் மருதூர். வழிபாட்டுக் கடவுள் முருகன்.
* வழிபடு குறு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம்.
* இராமலிங்க அடிகளின் நூல்கள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியன.
* இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்திவளாகம் ஆகியன.
* தம் கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர். இவரது கொடி மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை.
* இவரது ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு என்று போற்றப்படுகிறது.
* திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் போற்றப்படுகிறார். இவரது பாடல்கள் திருவருட்பா எனப்படுகின்றன.
* அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - இராமிலிங்க அடிகள்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - இராமலிங்க அடிகள்.
* வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை - இராமலிங்க அடிகள்.
தாயுமானவர்
* சமரச சன்மார்க்கத்தை முதன் முதலாகச் சொன்னவர். இதை விரிவாகக் கூறியவர் இராமலிங்க வள்ளலார்.
* இவர் பாடல்களுக்கு தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்று பெயர்.
* எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே - தாயுமானவர்.
கம்ப ராமாயணம்
* இதிகாசங்களில் முதலாவது இதிகாசம் இராமாயனம். கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.
* இயற்றியவர் கம்பர். கம்பராமாயணம் வால்மீகியின் இராமாயணத்தின் தழுவல் நூல் ஆகும்.
* கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய 6 காண்டங்கள்.
* அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - கம்பராமாயணம்.
* இன்றுபோய் நாளை வா - கம்பராமாயணம்
* வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் - கம்பராமாயணம்.
* அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா - கம்பராமாயணம்.
* கம்பரின் மகன் அம்பிகாபதி ஏர் எழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி ஆகிய நூல்களும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்களே.

சிற்றிலக்கியச் செய்திகள்
* சிற்றிலக்கிய வகை மொத்தம் 96 ஆகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைத் தெளிவாகக் கூறும் நூல் பன்னிரு பாட்டியில்.
* பரணி என்பது போர்க்கள தெய்வமான கொற்றவையைப் பாடும் நூல். பரணி 13 உறுப்புக்களை உடையது.
* பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்.
* பெரியவர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கியம் பிள்ளைத் தமிழ். 10 பருவங்களைக் கொண்டது பிள்ளைத் தமிழ்.
* கலம்பகம் என்பது பல்வகைப் பாக்களையும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கியமாகும். கலம் = 12, பகம் = 6 ஆக மொத்தம் 18 உறுப்புக்கள் கலம்பகத்தில் இடம் பெறும்.
* உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியம் பள்ளு. மருத நில நூலாகக் கருதப்படும் இலக்கியம் பள்ளு
* அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி ஆகும். அந்தாதியில் 100 பாடல் இருக்கும்.
* கோவை என்பது அக இலக்கியம். 400 பாடல்களைக் கொண்ட இலக்கியம் கோவை. கட்டளைக் கலித்துறையால் பாடப்படுவது கோவை ஆகும்.
* சதகம் என்றால் 100 பாடல்களைக் கொண்டது என்று பொருள். நீதிக்கருத்துக்கள் மிகுந்த சிற்றிலக்கியம் சதகம் ஆகும்.

பாரதியார்
* பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம், சுப்பையா என்றும் அழைக்கப்பட்டார். பெற்றோர் சின்னசாமி ஐயர் மற்றும் லட்சும் அம்மாள்.
* ஊர் எட்டயபுரம் வாழ்நாள் 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்)
* எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்.
* பாரதியார் தம்மை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார்.
* காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி, நித்திய தீரர் ஆகியவை இவரது புனைப்பெயர்கள்.
* பாரதியின் புதுக்கவிதை முன்னோடி வால்ட் விட்மன்
* புதுக்கவிதையின் முன்னோடி பாரதியார் ஆவார்.
* கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவிஞர் பாரதியார்.
* 1905ல் சக்கரவர்த்தினி என்ற இதழை பாரதியார் தொடங்கினார். கர்மயோகி, பாலபாரதி போன்ற இதழ்களையும் நடத்தினார்.
* இந்தியா என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார் பாரதியார்.
* சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
* நிவேதா தேவியைச் சந்தித்த பின் பாரதி தீவிரவாதியானார்.
* பாரதியார் 14 மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார்.
* இவரது முப்பெரும் பாடல்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியன.
* பாரதி சங்கத்தைக் கோற்றுவித்தவர் கல்கி.
* பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார்.
* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் - பாரதியார்.
* தேமதூரத் தமிழோசை உலகமெலாம் - பாரதியார்.
* சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - பாரதியார்.
* பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் - பாரதியார்.
* சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் - பாரதியார்.
* மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொள்ளுத்துவோம் - பாரதியார்.
* ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே - பாரதியார்.
* ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் - பாரதியார்.
* வாழிய பாரத மணித்திருநாடு - பாரதியார்.
* நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்.
* எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - பாரதியார்.
* ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு - பாரதியார்.
* பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் - பாரதியார்.
* புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதியார்.
* காதல் காதல் காதல் காதல் போயின் - பாரதியார்.
* பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் - பாரதியார்.
* தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்சகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்.
* காக்கை குருவி எங்கள் சாதி உடலும் மலையும் எங்கள் கூட்டம் - பாரதியார்.
* செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் - பாரதியார்.
* தருமட்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் - பாரதியார்.
* செந்தமிழ் நாடெனும் போதினிலே - பாரதியார்.
* சிந்து நதியின் மிசை - பாரதியார்.

No comments: