தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்த தினத்தை சென்னை மாநகரின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதல் தடுக்கும் நாளாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த 24.2.2012 அன்று சென்னை மாநகரம் முழுவதும் மாணவ, மாணவியர் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 64 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடிட சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 29.08.2013 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்த தினத்தன்று சென்னை மாநகராட்சி மூலமாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ‘எச்’ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர் இன்று பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்.
No comments:
Post a Comment