பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என கூடலூர் நகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. சுகாதாரத் துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தொடர் நடவடிக்கை இல்லாததால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. இச்சூழ்நிலையில், மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கூடலூர் என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வர தடை விதித்துள்ளனர்.
தினந்தோறும் தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது அதிகமாக இருந்தது. இதனை பள்ளி வளாகத்திலேயே ஆங்காங்கே போட்டு சென்றனர். இதனை தடுக்கும் பொருட்டும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் கொண்டு வரக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியின் நுழைவுப் பகுதியிலேயே மாணவர்களிடம் பிளாஸ்டிக் உள்ளதா என்று சோதனை நடத்திய பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கின்றனர். இந்த விழிப்புணர்வை அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்தினால், மாணவர்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment