மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், ஏற்கனவே 9 துறையகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 துறையகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் அனைத்து துறையகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் கிடைப்பதன் மூலம் சுதந்திரமான சர்வதேச தரத்திலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும், என துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவிததார்.
மதுரை காமாராசர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பாக, முன்னாள் துணைவேந்தர் எம்.டி.கே.குத்தாலிங்கம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை டாக்டர் முவ அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் கல்வியை போதிக்கும் கோவில். இப்புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் எனது தந்தையாரான எம்டிகே குத்தாலிங்கம் 92-ம் ஆண்டு முதல் 95-ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில், மாணவர்களின் கல்வி மேம்பாடுகளுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தினார். நிர்வாகத்தை திறம்படக் கையாண்டு, சிறந்த பல்கலைக்கழகமாக மாற்றிக் காண்பித்தார். அவரது நிர்வாகத் திறமையால், அவர் வகுத்த திட்டங்களால் தான் இன்றைக்கும் பல்கலைக்கழகம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனது முன்மாதிரியான அவர் வகுத்த வழியில் பல்கலைக்கழக மேம்பாட்டுக்கும், மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வி கிடைக்கவும், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறேன்.
இப்பல்கலைக்கழகம் ஆற்றல்சார் நிலையிலிருந்து, சர்வதேச அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சுயமாக, ஆய்வுகளை மேற்கொள்வதிலும், உயர்கல்விகளை மாணவர்களுக்கு போதிப்பதிலும் சில தடைகள் இருப்பதன. இந்த தடைகளை போக்கி, துறையகங்களில் சுதந்திரமான ஆய்வுகள் மேற்கொள்ளவும், உயர்கல்வியை மாணவர்களுக்கு தரமான முறையில் போதிக்கவும், 94-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்த, உயிரியல், பயோடெக், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆற்றல், வரலாறு, பொருளாதாரம், தமிழ் ஆகிய 9 துறையங்களுக்கும்(புலன்கள்), எனது தந்தையார் குத்தாலிங்கம் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கினார்.
அவரது வழியில், மீதமுள்ள பூமி மற்றும் சுற்றுமண்டல அறிவியல், வணிககல்வி, கல்வியியல், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள், இந்திய மொழிகள், மொழியியல் மற்றும் தகவல் தொடர்பு, மதங்கள், தத்துவம் மற்றும் மனிதநேய சிந்தனை, சமூக அறிவியல், இளைஞர்கள் அதிகாரம், கலைநிகழ்ச்சி மற்றும் தகவல்தொழில்நுட்பம் ஆகிய 11 துறையகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
தன்னாட்சி அதிகாரம் வழங்கும் போது சில அளவுகோல்களும் கொண்டு வரப்படும். இதன்படி, ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நிர்வாகம், நிதி மற்றுóம் கல்விபோதனை ஆகியவை அதற்கென அமைக்கப்படும் நிபுணத்துவம் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் மூலம், துறையகங்களில் சுதந்திரமான செயல்பாடுகளும், சர்வதேச தரத்திலான ஆய்வுகள் நடைபெறும், என்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.கே..குமரகுரு துவக்கவுரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் செல்லத்துரை, தனி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். ஓய்வுபெற்ற விஞ்ஞானி நம்மாழ்வார் ராஜன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, துறைத் தலைவர் கண்ணன் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment