Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 17 November 2013

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு.

        அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
           நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
 
               சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில்,ஆசிரியர் பணி நியமனத்திற்குஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.
 
               ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது. தகுதி தேர்வு தொடர்பாக தேசியஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்,சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் போது,அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.அதன்படி,அரசு உதவி பெறும் பள்ளிகள்,சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது.
 
                     தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும்குறைவாக மதிப்பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்,சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, :தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்,பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.

No comments: