Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 9 November 2013

பள்ளி மாணவர் செஸ் போட்டி: 24 பேர் பரிசுக்கு தேர்வு

பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில் 24 பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளன.

பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவரிடையே செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 3,4,5 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு; 6,7,8 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு; 9,10 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் ஒரு பிரிவு என நான்கு பிரிவிலும், மாணவர், மாணவியர் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதி போட்டிக்கு 360 மாணவர் தேர்வு பெற்றனர். இந்த போட்டி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. போட்டியை, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி, துறை செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
முடிவில் முதல் மூன்று இடங்களுக்கு முறையே தலா எட்டு மாணவர் வீதம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முதல் இடம் பெற்றவர்களுக்கு, 1,200 ரூபாய்; இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு, 800 ரூபாய்; மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு, 400 ரூபாய் வீதம், ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் அனைவருக்கும் கேடயமும் வழங்கப்பட உள்ளது.
விரைவில் நடக்கும் பரிசளிப்பு விழாவில், மாணவர்களுக்கு கேடயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய போட்டியில் பங்கேற்ற, 360 மாணவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

No comments: