Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 7 November 2013

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில் பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது.
இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இ-மெயில் முகவரி: dmschennai2010@gmail.com,

எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்:
94421-44401, 94435-74633.

No comments: