2013ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், வார்ஷெல் ஆகியோர் நோபல் பரிசை கூட்டாகப் பெறுகின்றனர்.
மூலக் கூறுகளின் மாதிரி வடிவமைப்பு குறித்த ஆய்வுக்காக அவர்கள் இந்த விருதினைப் பெறுகின்றனர். வேதியியல் பரிசோதனையின் போது சில சோதனைகள் பெரும்பாலும், வெற்றி பெறுவதில்லை.
அதில் இருக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கும், அதைப் பற்றி கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிப்பதற்கும் இந்த கண்டுபிடிப்பானது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசில் இருக்கும் சிறப்புகள்:
வேதியியலுக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசில் இருக்கும் சிறப்புகளை பற்றி தெர்ந்துக் கொள்ளலாம்.
1901 முதல் 2012 வரை மொத்தம் 104 விஞ்ஞானிகள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். 63 விஞ்ஞானிகள் தனியாக வேதியியலுக்கான நோபலை பெற்றுள்ளனர். இந்தப் பிரிவில் 4 பெண் விஞ்ஞானிகளும் நோபல் பெற்றுள்ளனர்.
மிக இளம் வயதில் நோபல் பரிசினைப் பெற்றவர் பிரெடரிக் ஜூலியட் என்பவர் தனது 35-வது வயதில் பெற்றார். மிக அதிக வயதில் நோபலை பெற்றவர் ஜான் பி பென் தனது 85 வயதில் பெற்றார். நோபல் பரிசினைப் பெற்ற விஞ்ஞானிகளின் சராசரி வயது 57.
பெண் விஞ்ஞானி மேரி க்யூரி குடும்பத்தில் மட்டுமே 5 பேர் நோபலை பெற்றுள்ளனர். இதில் மேரி க்யூரி மட்டும் இருமுறை நோபல் பரிசினை பெற்றுள்ளார். இந்தியர்களில் இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே வேதியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். அவர் வெளிநாடு வாழ் தமிழர்.
No comments:
Post a Comment