Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 7 October 2013

சமுதாய கல்லூரி மாணவர்களுக்கு சலுகை

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவினை முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்திருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை முதலமைச்சர் வழங்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தால், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் பயிலும் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில், நகர்ப்புற சமுதாயக் கல்லூரிகள், கிராமப்புற சமுதாயக் கல்லூரிகள், பெண்கள் சமுதாயக் கல்லூரிகள், பழங்குடியினர் சமுதாயக் கல்லூரிகள், சிறைச்சாலை சமுதாயக் கல்லூரிகள், எய்ட்ஸ்/எச்.ஐ.வி. நோயாளிகளுக்கான சமுதாயக் கல்லூரிகள் என 6 வகையான சமுதாயக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

No comments: