
அதேபோல், அக்டோபர் 26ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 8 தேர்வும் நவம்பர் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கும் குரூப் 2 தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 1ம் தேதி, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு நடைபெற உள்ளது. எனவே அந்த தேர்வு தேதியும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.